தேர்தலை நாம் இரத்து செய்யவில்லை.தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளதென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொண்டு கலப்புத் தேர்தல் முறைமை ஒன்றைக் கொண்டு வருவோம் என நாட்டுக்கு தெரிவித்தே மக்கள் ஆணையை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.அது தொடர்பில் எமது அரச தலைவர்கள் இந்த பாராளுமன்றத்தில் பல தடவைகள் விடயங்களைத் தெரிவித்துள்ளார்கள்.
நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதியைப் பெற்றுக் கொள்ளும்
போதும் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்றத்தில் இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டதாக சபையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதனை செயற்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை கலப்பு முறையில் நடத்துவது தொடர்பான யோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை இரத்து செய்யுமாறு ஆளும் கட்சியைப் போன்று எதிர்க்கட்சியினர் சிலரும் எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர். பாராளுமன்றத்திலும் அதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த வகையில் நாம் உண்மைத் தன்மை யுடனேயே செயல்படுகின்றோம் என்றார்.
