இஸ்ரேலிய தூதரகத்தை மூடவும், காசாவில் போர்நிறுத்தம் செய்யும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ளவும் தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதற்கும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் வரை அனைத்து உறவுகளையும் துண்டிப்பதற்கும் அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்து.
ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இவ்வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திரப் போராளிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு 248 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதோடு 91பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
தொடர்ந்து, தென்னாப்பிரிக்க பாராளுமன்றம் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில், தூதரக அதிகாரியை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.






Discussion about this post