2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஜனவரி முதல் ஆரம்பம்

2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முதற்கட்டத்தில் 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இதனிடையே, பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி செயலாளர் ஷாலிகா ஆரியரத்ன தெரிவித்தார்.

Exit mobile version