குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துஷார சஞ்சீவ, குருநாகல் / யாபஹுவ இராச்சிய சகாப்தத்தில் இருந்த, 13 ஆம் நூற்றாண்டின் அரசர் நீதிமன்றத்தை,
(புவனேகபாகு வரலாற்று தளத்தை அழித்த குற்றச்சாட்டில்)
வீதி அபிவிருத்தித் திட்டத்திற்காக இடித்துத் தரைமட்டமாக்கினார்.
குருநாகல் மாநகர சபையின் முன்னாள் மேயர் உட்பட நால்வருக்கு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) தண்டனை விதித்தது.
