லிட்ரோ எரிவாயு எதிர்வரும் மே மாதத்திலும் தடையின்றி விநியோகிக்கப்படுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே,20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 17,500 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
இந்த எரிவாயு கையிருப்புகள் தற்போது மாலைதீவில் உள்ள மிதக்கும் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 20,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் தென்னாபிரிக்கா ஊடாக மாலைதீவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
