2024 ஆம் ஆண்டு கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் உட்பட மக்களுக்காக 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிடுகிறார்.
இதற்காக 11 வீடமைப்புத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் 06 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 14,611 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், 11,269 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.




Discussion about this post