மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அத்தோட்டத்திலுள்ள எட்டு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வளர்ப்பு நாய்களை இரவு நேரங்களில் சிறுத்தைகள் வந்து கொண்டு செல்வதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் பணிக்கு செல்லும் இவர்கள் தற்போது சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பீதியில் உள்ளனர்.தேயிலை தோட்டங்கள் பல தற்போது காடாக மாறியதால் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தோட்ட நிர்வாகம் மீது குற்றம் சுமத்துகின்றனர்.




Discussion about this post