கொழும்பு- சிலாபம் வீதியின் கட்டுவ பகுதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியொன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கட்டுகெந்த தங்கொடுவ பகுதியைச் சேர்ந்த தந்தையும் அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Discussion about this post