மாட்டுப் பொங்கல் தினமான இன்று மட்டக்களப்பில் பண்ணையாளர்களால் ‘கறுப்புப் பொங்கல் தின நிகழ்வு‘ முன்னெடுக்கப்பட்டது.
மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது 120 நாட்களைக் கடந்துள்ளநிலையிலேயே குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள், விவசாய அமைப்புக்கள், பொது மக்கள், மத தலைவர்கள்,மற்றும் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், M.A சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வானது ஓர் அமைதி வழி போராட்டமாகவும் மற்றும் நடை பவனியாகவும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களினால் தமது கால்நடைகள் வதைக்கப்படுவது தொடர்பிலும் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.












Discussion about this post