நாரம்மல பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று விசேட விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த சாரதியின் குடும்பத்திற்கு பொலிஸாரின் தலையீட்டின் பேரில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.












Discussion about this post