மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அடுத்த வாரமளவில் பெற்றுக்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்சார கட்டண திருத்த யோசனை ஏற்கனவே இலங்கை மின்சார சபையினால் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நீர் மின் உற்பத்தி அதிகரிப்பினால் மின்சார சபைக்கு ஓரளவு இலாபம் கிடைத்துள்ளதால் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை 100 வீதமாக அதிகரிப்பதை நீக்குமாறு எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.
அதிக மழையினால் இலங்கை மின்சார சபை அதிக இலாபம் ஈட்டி வருவதாகக் குறிப்பிடும் குழு, அந்த இலாபத்தின் பலனை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை அரசு கணிசமாக குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.












Discussion about this post