T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லபட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக சில விபரங்கள் வெளியாகியுள்ளன.
காரில் வந்த 4 சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தேரர் இன்று பிற்பகல் உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஷனாராம மகா விகாரையில் சேவையாற்றி வந்த தம்ம ரத்தன என்ற 45 வயதுடைய தேரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











Discussion about this post