கதிர்காமம்- செல்லக்கதிர்காமம் பிரதான வீதியின் பஸ்ஸரயாய சந்தியில் வேன் ஒன்று இரண்டு மரங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் பூம் ரக வாகனத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே , இவ்விபத்தில் ஒருவர்; உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 25 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவில் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கதிர்காமத்தை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடையவர்.
விபத்தின் போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இவர்கள் வேன் ஒன்றில் நீராடச் சென்றுவிட்டு செல்லக்கதிர்காமத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.











Discussion about this post