`முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கூலி இல்லாமல் வேலை செய்ய வற்புறுத்தியிருக்கிறார்.
அதற்கு அந்தத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.” – காவல்துறை
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ரபீக் கும்பார். கான்ட்ராக்டரான இவர், அஞ்சார் நகரத்திலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள் 15 பேரின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில், தொழிலாளர்கள் யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லை என்றாலும், 15 பேரின் வீடும் நிர்மூலமானது.
இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, திடீரென தீப்பற்றியதற்கான காரணங்களை விசாரித்தது. அப்போதுதான் முகமது ரபீக் கும்பார் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கூலி இல்லாமல் வேலை செய்ய வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு அந்தத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.
அதனால், கடந்த சனிக்கிழமை, ‘எனக்கு நீங்கள் கூலி இல்லாமல் வேலை செய்யாவிட்டால், உங்களை வீட்டோடு கொளுத்திவிடுவேன்’ என மிரட்டியிருக்கிறார். அதன்படி வீட்டைக் கொளுத்தியிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
AV