‘அலக்ஸா’ உதவியுடன் 15 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய சிறுமி.. ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து!

மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாறிவரும் கால சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அசூர வேகம் எடுத்துள்ளது. முன்பெல்லாம் கடினப்பட்டு பல மணி நேரம் செய்த வேலைகளை எல்லாம் தொழில்நுட்பத்தின் உதவியால் மிக எளிதில் செய்து முடித்துவிட முடிகிறது. மிக தொலைவில் இருந்து பொருட்களை கட்டுப்படுத்தும் அம்சங்கள் அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

அத்தகைய தொழில்நுட்பம் தான் அமேசான் நிறுவனத்தின் அலக்ஸா செயலி. இதன் மூலம் உங்களால் பல வேலைகளையும் எளிமையாக செய்ய முடியும். திரைப்படம், பாடல், மின்விசிரி போடுவது என நாம் எதை சொன்னாலும் அலக்ஸா அப்படியே செய்யும். பொழுதுபோக்கிற்காகவும், உதவிக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த கருவியை ஒரு சிறுமி தனது தங்கையின் உயிரை காப்பாற்ற பயன்படுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த 13 வயதி சிறுமி ஒருவர் அலக்ஸா மூலம் தனது 15 மாத தங்கையை காப்பாற்றியுள்ளார். எதிர்பாராத விதமான தனது தங்கை விளையாடிக்கொண்டிருந்த அறையில் குரங்கு புகுந்துவிட, தனது தங்கையை காப்பாற்ற புத்திசாலிதனமாக யோசித்த சிறுமி அலக்ஸவிடம் நாய் போல குறைக்க சொல்லியிருக்கிறார். அலக்ஸா நாய் குறைக்கும் சத்தத்தை ப்ளே செய்ததும் குரங்கு அங்கிருந்து ஓடிவிட்டது.

இந்த 13 வயது சிறுமியின் புத்திசாலிதனமான செயலுக்கு பலரும் பாரட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்றைய காலக்கட்டத்தில் நாம் தோற்றுப்போவோமா அல்லது தொழில்நுட்ப உதவியுடன் வளர்ச்சியடைவோமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த 13 வயது சிறுமியின் கதை, தொழில்நுட்பம் எப்போதும் நமது புத்திசாலிதனத்தை தூண்டும் என்று உணர்த்தியுள்ளது.

மிகவும் அசாத்தியமாக யோசித்து தனது தங்கையை அந்த சிறுமி காப்பாற்றியுள்ளார். பின்னாட்களில் அவர் விரும்பினால் எஙக்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version