14 ஆண்டுகால உழைப்பு… ஆடு ஜீவிதம் படக்குழுவினரை பாராட்டிய சூர்யா!

பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி 14 வருட உழைப்பில் இந்தப் படத்தை பிளெஸ்ஸி எடுத்துள்ளார். பல்வேறு தடைகளைக் கடந்து படம் நாளை திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பிளெஸ்ஸி இயக்கத்தில், பிருத்விராஜ் நடித்திருக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. நேற்றுவரை கேரள முன்பதிவில் மட்டும் ஆடு ஜீவிதம் திரைப்படம் 2.5 கோடிகளைத் தாண்டியுள்ளது.

பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி 14 வருட உழைப்பில் இந்தப் படத்தை பிளெஸ்ஸி எடுத்துள்ளார். பல்வேறு தடைகளைக் கடந்து படம் நாளை திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

நஜீப் என்ற மலையாளியின் உண்மைக் கதையைத் தழுவி எழுதப்பட்ட கதையிது. தன்னைக் கொடூரமான முறையில் துன்புறுத்திய முதலாளியைத் தவிர, எந்த மனிதத் தொடர்பும் இல்லாமல் பாழடைந்த பாலைவனத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்த நஜீப் கற்பனை செய்ய முடியாத பல துன்பங்களை அனுபவித்தார். அடிப்படைத் தேவைகள் இன்றிப் போராடிய அவருக்கு மாற்றுவதற்கு உடைகள் கூட ஏதுமில்லை.

விளம்பரம்

Exit mobile version