“அப்பாவிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான்!” – ஸ்ருதிஹாசன் ஷேரிங்

‘‘இப்ப ‘சென்னை ஸ்டோரீஸ்’னு ஒரு இண்டர்நேஷனல் படம் பண்ணுறேன். முழுக்க முழுக்க சென்னையில நடக்கிற கதை. அதற்கான ஷூட்டிங்கிற்காக சென்னையிலதான் ஒரு மாசமா இருக்கேன்.

‘எனக்குத் தனியிசைப் பாடல்கள் மூலமா பெயர் கிடைச்சிருக்கு என்றாலும், ஒரு பாடகியா என்னோட கரியர் தொடங்கியது சினிமாவில்தான். ‘தேவர் மகன்’ படத்துல வரும் ‘போற்றிப் பாடடி பொண்ணே…’ பாடும்போது எனக்கு அஞ்சு வயசுதான். அந்த வயசில இளையராஜா சார்னா யாரு, சிவாஜி தாத்தான்னா யாரு, பாடல் பதிவுனா என்ன… இப்படி எதுவுமே எனக்குத் தெரியாது. அன்னிக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் என்னைப் பாடச் சொன்னாங்க. நானும் ஜாலியா பாடிட்டேன். ஆனா, இப்ப அந்தத் தருணங்களை நினைச்சுப் பார்த்தால், ‘எப்படிப்பட்ட ஒரு மொமன்ட்’னு ஆச்சரியமா இருக்கும். என் வாழ்க்கையில இசைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. அதனாலதான், தொடர்ந்து, இசையோடு பயணிச்சுட்டிருக்கேன். அதனுடைய தொடர்ச்சியா, ‘இனிமேல்’ மாதிரி ஒரு அழகான கான்செப்டையும் பண்ணியிருக்கேன். என்னுடைய மியூசிக் ஆல்பங்கள்ல ‘இனிமேல்’ ரொம்பவும் ஸ்பெஷல்! காரணம், அப்பா பாடல் வரிகள் எழுதியிருக்கார், அப்பாவுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிச்சிருக்காங்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகரா அறிமுகமாகிறார். இப்படிப் பல விஷயங்கள் இருக்கு…’’ ஒரு டன் எனர்ஜி மின்னப் பேசுகிறார் ஸ்ருதிஹாசன்.

Exit mobile version