இரவு 11 மணிக்கு நெஞ்சை பிடித்த டேனியல் பாலாஜி.. சிஆர்பி செய்தும் பிழைக்காத “அமுதன்”! நடந்தது என்ன?
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிஆர்பி எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி எனும் டிவி சீரியல் மூலம் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் பாலாஜி. பின்னாளில் இவர் டேனியல் பாலாஜி என அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.