பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியான பிரேமலு படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கிரிஷ் ஏடி இயக்கிய இந்தப் படத்தில் மமிதா பைஜு, நஸ்லென் கே கஃபூர் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். லவ், ரொமான்ஸ், காமெடி என 2கே கிட்ஸ்களுக்கான ட்ரீட்டாக பிரேமலு உருவாகியிருந்தது. ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.
முக்கியமாக மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் பிரேமலு ஹிட் அடித்தது. 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான பிரேமலு, இதுவரை 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது. ஒருபக்கம் மஞ்சும்மல் பாய்ஸ், இன்னொரு பக்கம் பிரேமலு என ஒரே நேரத்தில் இரண்டு மலையாள படங்கள் அதிரி புதிரியாக மாஸ் காட்டின. இந்த இரண்டு படங்களுக்கும் தமிழக ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. இதனையடுத்து பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 12ம் தேதி ஹாட்ஸ்டார் டிஸ்னி ப்ளஸ்ஸில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள பிரேமலு, ஓடிடியிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பிரேமலு தெலுங்கு வெர்ஷன் ஆஹா ஓடிடியில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: