தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி இருக்கிறது.
85 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்குகளை அளிக்கும் முறை 2021 சட்டமன்ற தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறை முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 85 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள் வாக்கு அளிக்கும் வகையில் தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நடைமுறைபடுத்தி வருகின்றனர்.
இதன்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 85 வயதை சேர்ந்தவர்கள் 21, 805 பேரும், மாற்றுத்திறனாளிகள் 9,824 பேரும் உள்ளனர். இவரக்ளுக்கு தபால் வாக்குகளை செலுத்தும் படிவம் கடந்த 3 நாட்களாக வழங்கப்பட்டது.
இதில் 3001 பேரிடம் தபால் வாக்குகளை நேரில் சென்று பெறும் பணி இன்று காலை முதல் தொடங்கியது. தொகுதிக்கு 3 பேர் என்று 12 குழுக்கள் பிரிந்து தபால் வாக்குகளை மாலை 6 மணி வரை சேர்கரிக்க உள்ளனர். இந்த வாக்கு சேகரிப்பு வருகின்ற 7ம் தேதிவரை நடைபெறும். இதுபோல தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் தபால் வாக்குகள் சேகரிப்பு வருகின்ற திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்