பங்களாதேஷில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை மர்ம நபர்கள் தலையில் சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகக் காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாணவத் தலைவர் ஒருவர் சுடப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதனையடுத்து, பங்களாதேஷில் பெரும் கலவரம் வெடித்தது.
இந்நிலையில் தற்போது மற்றொரு மாணவத் தலைவரும் சுடப்பட்டுள்ள நிலையில், அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைதுசெய்ய பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
