புத்தாண்டு தினத்தில் சுவிஸ் மதுபான விடுதியில் வெடி விபத்து; பலர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர்.

கிரான்ஸ்-மொன்டானாவின் ஸ்கை ரிசார்ட் நகரத்தில் அமைந்துள்ள மதுபான விடுதியில் நடந்த இந்த வெடிப்பில் பலர் காயமடைந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இறப்பு மற்றம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.

இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

சுவிட்சர்லாந்து அசாதாரண வறட்சியின் மத்தியில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இசை நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், உறுதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு உதவி பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

வெடி விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், மதுபான விடுதியில் இருந்து  பெரும் புகை வெளியேறுவதையும், மக்கள் பீதியில் ஒடுவதையும் வெளிக்காட்டுகிறது.

அழகிய சுவிஸ் ஆல்ப்ஸின் மையத்தில் அமைந்துள்ள கிரான்ஸ்-மொன்டானா, மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும், 

மேலும் பனிச்சறுக்கு மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளுக்காக உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கிறது. 

இந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுவிஸ் தலைநகரான பெர்னில் இருந்து சுமார் இரண்டு மணிநேரம் தொலைவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version