ஈரானில் இடம்பெற்றுவருகின்ற போராட்டங்களையடுத்து கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவதளத்தில்பணியாற்றும் பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னியின் ஆலோசகர், அலி ஷம்கானி தனது எக்ஸ் பக்கத்தில் “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அணுஆயுத நிலையத்திற்கு எதிராக பயனற்ற ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இதனுடன் ஈரானிய ஏவுகணைகளால் அல்-உதைதில் (கத்தார்) உள்ள அமெரிக்கத் தளம் அழிக்கப்படுவது குறித்தும் குறிப்பிடுவது நல்லது.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுப்பதில் ஈரானின் விருப்பம் மற்றும் திறமை குறித்து ஒரு உண்மையான புரிதலை உருவாக்க இது நிச்சயமாக உதவும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து அமெரிக்கா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
