கத்தோலிக்க அருட்சகோதரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களுக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதோடு, 29ஆம் திகதியன்று அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
