பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நேற்று (05) ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர்.
க .பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்ற விசேட வகுப்பில் கலந்துகொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையிலே இவ்வாறு தகராறு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Discussion about this post