ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயம்: ஒரு நிகழ்விற்காக 1.1 கோடி

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயம்: ஒரு நிகழ்விற்காக 1.1 கோடி ரூபா செலவு என தகவல் அறியும் உரிமையின் கீழ் வெளிப்பாடு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்காக மாத்திரம் 11,079,075.50 ரூபா (ஒரு கோடியே பத்து இலட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து எழுபத்தைந்து ரூபா ஐம்பது சதம்) செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ‘தினக்குரல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலின் ஊடாக இந்தச் செலவு விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்த நாள் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, செலவுகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துடன் இணைந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் இந்த ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அன்றைய தினம் மன்னார் காற்று மின் உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்ததுடன், வேலணை மற்றும் மானிப்பாய் மருதடி கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாக்களிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version