Monday, April 27, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயம்: ஒரு நிகழ்விற்காக 1.1 கோடி

by editor
February 27, 2026
in இலங்கை
0 0
A A
0
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயம்: ஒரு நிகழ்விற்காக 1.1 கோடி
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயம்: ஒரு நிகழ்விற்காக 1.1 கோடி ரூபா செலவு என தகவல் அறியும் உரிமையின் கீழ் வெளிப்பாடு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்காக மாத்திரம் 11,079,075.50 ரூபா (ஒரு கோடியே பத்து இலட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து எழுபத்தைந்து ரூபா ஐம்பது சதம்) செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ‘தினக்குரல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலின் ஊடாக இந்தச் செலவு விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்த நாள் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, செலவுகள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளன:

  • கண்காட்சி கூடாரங்கள் மற்றும் மேடை அமைப்பு: நிகழ்விற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மேடை மற்றும் கூடாரங்களுக்காக மாத்திரம் 5,237,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
  • உணவு மற்றும் உபசரிப்பு: நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான சிற்றுண்டி மற்றும் உபசரிப்புப் பணிகளுக்காக 3,113,000 ரூபா செலவாகியுள்ளது.
  • போக்குவரத்துச் செலவுகள்: பொதுமக்களை நிகழ்விடத்திற்கு அழைத்து வருவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையிடமிருந்து 75 பஸ் வண்டிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டதுடன், அதற்காக 2,343,000 ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
  • கூடுதலாக, மீசாலை பகுதியில் நடைபெற்ற வீட்டு வசதி உதவி வழங்கும் நிகழ்விற்கு மக்களை அழைத்து வருவதற்காக 11 தனியார் பஸ் வண்டிகளுக்காக 223,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
  • சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள்: நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளுக்காக (Banners) 51,700 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
  • ஏனைய செலவுகள்: விருந்தினர் வரவேற்புச் செலவுகள்: 23,375 ரூபா
  • குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள்: 36,000 ரூபா
  • முன்னேற்பாட்டுப் பணிகள்: 118,000 ரூபா
  • ஏனைய பொதுச் செலவுகள்: 154,000 ரூபா

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துடன் இணைந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் இந்த ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அன்றைய தினம் மன்னார் காற்று மின் உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்ததுடன், வேலணை மற்றும் மானிப்பாய் மருதடி கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாக்களிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடு
இலங்கை

மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடு

April 27, 2026
மின்னலுக்கான எச்சரிக்கை!
இலங்கை

மின்னலுக்கான எச்சரிக்கை!

April 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

April 27, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடு

மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடு

April 27, 2026
மின்னலுக்கான எச்சரிக்கை!

மின்னலுக்கான எச்சரிக்கை!

April 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

April 27, 2026
இரண்டு வயது குழந்தையை விற்று மொபைல்  வாங்கிய குற்றச்சாட்டில் தாய்  கைது!

இரண்டு வயது குழந்தையை விற்று மொபைல் வாங்கிய குற்றச்சாட்டில் தாய் கைது!

April 27, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version