அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என்ற சட்டத்தை இன்று (20) முதல் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தீர்மானம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
