அட்சய திருதியை 2026? தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்? | Akshaya Tritiya 2026
இந்து மாதத்தில் அட்சய திருதியை மங்கலகரமான நாளாக கருதப்படுகிறது. அதுமட்டும் அல்ல தங்கம் வாங்க இந்த நாள் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும்.
அட்சய திருதியை 2026: அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத, என்று பொருள். ஏப்ரல் 19ஆம் தேதி 10:49 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் ஏப்ரல் 20ஆம் தேதி காலை 07:27 மணிக்கு முடிவடையும்.
தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருவதால், நகை வாங்க பலரால் முடியாது. ஆனால் வெள்ளி விலையோ குறைவு தான். அதனால் மாறாக வெள்ளி நகை வாங்கலாமா என பார்க்கலாம்.
நகை வாங்க உகந்த நேரம்: தங்கம் வாங்க ஏப்ரல் 19 காலை 10:49 மணி முதல் ஏப்ரல் 20 காலை 7:27 மணி வரை மிக உகந்த நேரமாகும். பெரும்பாலானோர் ஏப்ரல் 19, காலை முதல் மாலை வரை (முக்கியமாக 10:49 AM – 12:20 PM) நகை வாங்க சிறந்த நேரமாகக் கருதுகின்றனர். இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.
தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருவதால், நகை வாங்க பலரால் முடியாது. இதனால் வெள்ளி வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் வெள்ளி நகை, வெள்ளி பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள் போன்ற பொருட்களை வாங்கலாம். வெள்ளியும் லட்சுமியுடன் தொடர்புடையதாகும்.
அதே போல், சாமானிய மக்கள் நகை வாங்க முடியாதவர்கள், மங்களப் பொருட்களாக கருதப்படும் சில பொருட்களை வாங்குவது நல்லதாகும். கல் உப்பு, மஞ்சள், அரிசி அல்லது கடலைப்பருப்பு ஆகிய பொருட்களை வாங்குவது சிறந்ததாகும்.
