அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது…

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை (26) நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version