பல்கலைக்கழக ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்பு

பல்கலைக்கழக ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலைக்கழக ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் (28) முதல் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனுடன் தொடர்புடைய பெறுபேறுகள் மார்ச் 31 ஆம் திகதி முதல் இணையத்தில் வெளியிடப்பட்டன.

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, நாடு முழுவதும் உள்ள 2,362 நிலையங்களில்; நடைபெற்றன.

இந்த பரீட்சைக்காக 221,413 பாடசாலை விண்ணப்பதாரர்களும்; 60,397 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்கலாக 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.

அதன்படி, 176,527 பேர் பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றனர்.

Exit mobile version