மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு இணையாக நீர் வழங்கல் கட்டணங்களையும் திருத்தியமைக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி மீளாய்வு வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சமீபத்தில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, நீர் விநியோகத்திற்கான செலவு அதிகரித்துள்ளமையே இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பொதுவான நடைமுறையின்படி நீர்க் கட்டணத் திருத்தம் ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளப்படுவதுடன், இம்முறைக்கான காலமுறைப்படியான விலை மாற்றம் ஜூன் மாத இறுதியில் இடம்பெறவுள்ளது.
இந்த விலைத் திருத்தம் குறித்த மேலதிக தகவல்கள் ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Discussion about this post