தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கமளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐ.நா.அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஐ.நா.வின் அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களம் நடத்தும் திட்டங்கள் தொடர்பாக ஐ.நா. பிரதிச் செயலாளருக்கு அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும் சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.











Discussion about this post