அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் படத்தின் மிக சரியான தெரிவு என்றும் தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பலரும் அவர்களின் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ”நன்றி.. தங்க்ஸ்.. சுக்ரியா.. நன்னி.. தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி.
பொன்னியின் செல்வன் – விக்ரம் நான் நிறைய படங்களில் நடித்திருக்கேன்; நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன்.
எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
