2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் தொழிலாளர்களின் பணம் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்ட நிலையில் அந்த மாதத்தைவிட 30 மில்லியன் டொலர் அதிகம் என அவர் கூறினார்.
2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 42 வீதம் அல்லது 113 மில்லியன் டொலர் அதிகரிப்பு எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணிக்கான புதிய ஊக்குவிப்பு திட்டம் கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Discussion about this post