மண்டூஷ் சூறாவளி காரணமாக தமது 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர்.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால், கடல் அலைகளின் தாக்கத்தால், தமது 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளது என்றும் இதனால் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் க்கூறியுள்ளனர்.
சேமடைந்த படகுகளை திருத்துவதற்கான பொருளாதார வசதி இல்லை என்பதனால் அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
