பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்ய ரயில்வே பாதுகாப்பு துறைக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றி பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டால் அது தொடர்பில் ஆராய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில சமயங்களில் பயணிகளின் நகைகளை ரயில்வே பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்ய முயல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய அடையாள அட்டையை கையகப்படுத்துவது குறித்து ஆட்பதிவு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தேசிய அடையாள அட்டையை கையகப்படுத்த ரயில்வே பாதுகாப்பு பிரிவுக்கு அதிகாரம் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட நபர் இது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.












Discussion about this post