அரசியலமைப்புச் சபையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சிவில் உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில், தாம் விரும்பிய நபர்களை நியமித்து அதனூடாக தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமான நபரொருவரை கணக்காய்வாளராக நியமித்துக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கொழும்பிலுள்ள கட்சித் தலைமை அலுவல கத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கணக்காய்வாளர் ஒருவரை நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைகளுக்கு அனுமதி யளிக்கும் அரசியலமைப்புச் சபையின் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மூவரின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 02ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
தாம் விரும்பிய நபர்களை அரசியலமைப்புச் சபைக்கு நியமித்துக்கொண்டு தமது பிரதிநிதியொருவரை கணக்காய்வாளராக நியமித்துக்கொள்ளும் நோக்கத்திலேயே கணக்காய்வாளர் நியமனத்தை ஜனாதிபதி காலந்தாழ்த்தி வருகிறாரென்று நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
சுயாதீன நிறுவனங்களுக்கு களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அவ்வாறு இல்லாவிட்டால் திசைகாட்சியைச் சேர்ந்த சகோதரர்களையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நியமித்து வருகிறது. இவ்வாறே இவர்கள் சுயாதீன நியமனங்களை வழங்கி வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்












Discussion about this post