திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 6 மணியளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












Discussion about this post