பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் இன்று வெளியாகியுள்ளது. கேரளாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை பார்த்து வருகின்றனர். முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் ‘லியோ’ திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என திரை ஆர்வலர்கள கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘லியோ’ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெளியான முதல் நாளே முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகி உள்ளதால் சினிமா துறையினர் மற்றும் திரை ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Discussion about this post