பிரபல குத்துச் சண்டை வீரர் ஜாக்கிசான், தனது உடல்நிலை குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காகவே உலகம் முழுவதும் ரசிகர் படையைக் கொண்டுள்ள ஜாக்கிசான் நேற்று (07.04.2024) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனையொட்டி ரசிகர்கள் உடனான கலந்துரையாடலில் அவர் பங்கேற்றார். அப்போது கடந்த மாதம் வெளியான தனது புகைப்படம் ஒன்றை பார்த்து பலரும் கவலையில் ஆழ்ந்ததை ஜாக்கிசான் குறிப்பிட்டார்.
அது வயதான தோற்றத்தில் தான் நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கான விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ எனக் கூறியுள்ள ஜாக்கிசான், தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post