Sunday, April 19, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

உயிர் பலி எடுக்கும் பிரசங்கத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டுபிடிப்பு – ஒரே மாதிரி உயிரை மாய்த்துக் கொள்ளும் மனிதர்கள் இதுவரை 7 பேர் பலி..! தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்

by editor
January 3, 2024
in இலங்கை
0 0
A A
0
உயிர் பலி எடுக்கும் பிரசங்கத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டுபிடிப்பு – ஒரே மாதிரி உயிரை மாய்த்துக் கொள்ளும் மனிதர்கள் இதுவரை 7 பேர் பலி..! தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்
Share on FacebookShare on Twitter

மலபேயில் நஞ்சு உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இளைஞனும், யுவதியும் அதே போன்று தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று தற்கொலை செய்துக்கொண்ட அந்த குடும்பத்தின் தலைவர் பௌத்த மதத்தைத் திரிபுப்படுத்தி பிரசங்கம் செய்ததாகக் கூறப்படும் நபரின் பிரசங்கங்களிலும் அவர் கலந்துகொண்டதைடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ருவான் பிரசன்ன குணரத்ன என்ற 47 வயதுடைய நபர் பௌத்த மதத்தை திரிபுப்படுத்தி பல இடங்களில் பிரசங்கம் செய்துள்ளார்.

அந்த பிரசங்கங்களில், தற்கொலை செய்து கொள்வதன் மூலம் அடுத்த ஜென்மத்திற்கு விரைவாகச் செல்ல முடியும் என்று கூறியிருந்தார்.

குறித்த நபர் ஒரு ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்துள்ளதுடன், பின்னர் அவர் அதை விட்டுவிட்டு பல்வேறு பகுதிகளில் இவ்வாறு பிரசங்கம் செய்து வந்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி ஹோமாகமவிலுள்ள வாடகை வீட்டில் சயனைட் போன்ற விஷத்தை உண்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

அவரது இறுதிச் சடங்கு நாளன்று அதாவது கடந்த டிசம்பர் 30-ம் திகதி அவரது மனைவி மூன்று பிள்ளைகளுடன் ஒரே மாதிரியான விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாலபே பொலிஸார் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த பிரீத்தி குமார என்ற 34 வயதுடைய நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பெண்ணின் கணவரின் பிரசங்கத்தில் கலந்து கொண்டதாகவும், அதனால் தான் இறுதிச் சடங்குக்காக வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

அந்த பிரசங்கத்தில் தற்கொலையை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டதாகவும் அந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய 34 வயதுடைய பிரீத்தி குமார இன்று மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் 1:30 மணியளவில் அதேபோன்ற விஷத்தினை உட்கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் விஷத்தின் மீதம் அறையில் இருந்த மேசையில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர் பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசாரம் செய்த 47 வயதுடைய ருவான் பிரசன்ன குணரத்னவின் நெருங்கிய உறவினர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தற்கொலை செய்து கொண்ட நபருடன் மாலபே பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் உட்பட மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 21 வயதுடைய மற்றுமொரு யுவதியும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யக்கல ரஃபல்வத்த பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யுவதி ருஹுனு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் பிரிவில் பிரவேசிப்பதற்கு தகுதி பெற்றிருந்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்த ருவான் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் பிரசங்கங்களிலும் அந்த யுவதி கலந்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்தந்த தற்கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட சயனைட் வகை விஷப் பொடியும் ஒன்றா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த நபரின் பிரசங்கங்களில் கலந்து கொண்ட குழுவினர் இன்று பிற்பகல் மாலபே பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

மேலும், அவரது பிரசங்கங்களில் பங்கேற்றவர்களுக்கு சயனைட் போன்ற விஷம் கொடுக்கப்பட்டதா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆய்வு கூடத்தில் பணிபுரியும் போது அவர் சயனைட் தயாரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட நபருடன் தொடர்புடையர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

அட்சய திருதியை 2026? தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?
இலங்கை

அட்சய திருதியை 2026? தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

April 19, 2026
பெற்றோலுக்கான QR முறைமை – மீண்டும் அமுல்..
இலங்கை

பெற்றோலுக்கான QR முறைமை – மீண்டும் அமுல்..

April 18, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

பிற்பகலில் இடியுடன் மழை – பல பகுதிகளுக்கு எச்சரிக்கை!

April 18, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
அட்சய திருதியை 2026? தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

அட்சய திருதியை 2026? தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன வாங்கலாம்?

April 19, 2026
பெற்றோலுக்கான QR முறைமை – மீண்டும் அமுல்..

பெற்றோலுக்கான QR முறைமை – மீண்டும் அமுல்..

April 18, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

பிற்பகலில் இடியுடன் மழை – பல பகுதிகளுக்கு எச்சரிக்கை!

April 18, 2026
குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும்?

குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும்?

April 18, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version