தலைமன்னாரில் நேற்றிரவு காணாமல் போனதாக கூறப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் இன்று அவரது இல்லத்திலிருந்து 300 மீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பாட்டி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை அவரது வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் குழந்தையின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
சடலத்தை கண்டெடுக்கும் போது, குழந்தை தனது ஆடையை அணிந்திருந்த நிலையில், அவரது கீழ் ஆடை காணவில்லை.
குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.











Discussion about this post