தஞ்சாவூர் அருகே வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கைகலப்பு நிகழ்ந்த நிலையில் கத்தி குத்துக்கு ஆளாகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சை மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷன். கூலித் தொழிலாளியான இவரது வீட்டிற்கு அருகே குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இருசக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 9-ம் தேதி, குணசேகரன் வீட்டின் முன்பு, தர்ஷன் தமது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
இதைக் கண்டு எரிச்சலடைந்த குணசேகரன், வாகனத்தை அங்கிருந்து அகற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு தர்ஷன் மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வளர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குணசேகரன், தர்ஷனைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த தர்ஷன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தா. உடனே அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர்ழந்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரனைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post