விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், சில தினங்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், தற்போது வெளியான அஜித்தின் போட்டோ வைரலாகி வருகிறது.
அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அஜர்பைஜானில் நடைபெற்று வந்த இந்தப் படப்பிடிப்புக்கு தற்போது பிரேக் விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து சென்னை திரும்பிய அஜித், சில தினங்களுக்கு முன்னர் அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்தார். மூளையில் இருந்து காது பகுதிக்கு வரும் நரம்பில் வீக்கம் இருந்ததால், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாக சொல்லப்பட்டது.
இதனால் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை என வெளியான தகவல்கள் பொய் என்பது உறுதியானது. அதேபோல், சிகிச்சை காரணமாக அஜித் சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ அப்போலோவில் இருந்து வீடு திரும்பிய மறு நாளே மகன் ஆத்விக்கின் பள்ளிக்கு விசிட் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார். தொடர்ந்து வழக்கம் போல நார்மல் மோடில் வலம் வரும் அஜித், இப்போது மீண்டும் பைக் ட்ரிப்பில் பிஸியாகிவிட்டார்.
விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்காததால் தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். பைக் ட்ரிப்பின் பிரேக்கில் கேஷுவலாக கால் மீது கால் போட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறார் அஜித். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ‘Fit And Agile !!! AK back on Track’ என்ற கேப்ஷனுடன் அஜித் மீண்டும் பைக் ட்ரிப்பில் களமிறங்கிவிட்டார் என அப்டேட் கொடுக்க, ரசிகர்கள் செம்மை வைப் ஆகிவிட்டனர்.
எப்படியோ அஜித் நலமாக இருந்தால் அதுவே போதும் எனவும், அப்படியே விடாமுயற்சி அப்டேட் கொடுத்தால் இன்னும் சூப்பர் என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். விடாமுயற்சியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post