நான் எப்போதுமே இந்த மார்க்கெட் வேல்யூ பக்கம் போறது இல்ல. என் ஜானர் இது, இதுல எனக்கான வேலையைச் செஞ்சிட்டே இருப்பேன். இன்னைக்கு நீங்க பேட்டி எடுக்கும்போது என்னோட நாலு படத்தைப் பத்திக் கேட்டீங்க
எப்போதும் ‘கலகலப்பாக’ப் பேசும் ‘சென்னை 28′-ஐச் சேர்ந்த ஆளுதான் ‘மிர்ச்சி’ சிவா. இவர் நடிக்கும் ‘தமிழ்ப் படங்கள்’ நார்மலான ‘மசாலா படங்கள்’ போல் இல்லாமல் ‘சொன்னா புரியாத’ ரகளையான ‘தில்லுமுல்லு’ ஜானர். இவரின் படங்கள் ஒரு ரகம் என்றால், இவரது கேங்கோ ‘144′ போட்டாலும் வா ‘பார்ட்டி’ பண்ணலாம் என்கிற ஜாலி ரகம். வெளியில் ஜாலி மோடில் இருக்கும் சிவா, அவரது பெசன்ட் நகர் அலுவலகத்தில் இருக்கும்போது பக்தி மோடுதான். பக்தி மணத்தோடு ஊதுபத்தி மணமும் கமழும் அவரது அலுவலகத்தில் அமர்ந்து பேசினோம்.
Discussion about this post