eZ Cash மற்றும் M Cash ஊடாக போதைப்பொருள் கொள்வனவு செய்யும் நபர்களை இலக்கு வைத்து விசேட நடவடிக்கையொன்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைக்கு சமாந்தரமாக சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஏப்ரல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நடவடிக்கைகளின் போது, eZ Cash மற்றும் M Cash ஆகியவற்றைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 198 நபர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இதன்படி, 18 கடத்தல்காரர்களின் வங்கி கணக்கு பதிவுகளை ஆராய்ந்து, மேலும் 71 சந்தேக நபர்களின் தொலைபேசி கோபுர தரவுகளை பகுப்பாய்வு செய்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post