கொழும்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு மற்றும் 5,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த யுவதி மீது இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டிற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரான யுவதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.




Discussion about this post