தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மேலும் நவம்பர் மாத இறுதியில் ஆய்வுகளை நடத்துவதற்கு டிஸ்னி நிறுவன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பிரதேசத்தில் உள்ள பாரிய உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு இவ்வாறான முதலீடு நன்மை பயக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post