பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அவசர தேவைகளை கருத்திற் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 05 பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதற்கமைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் யு.பீ.ஏ.கே.பீ. கருணாநாயக்க மேல் மாகாண போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜீ.ஐ.டீ.ஆர் விஜேசிங்க , காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிபொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் எல்.ஏ.யூ.சரத்குமார, மேல் மாகாண குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.கே.ஜே.ஆர்.டயஸ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுக்கான பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்டத்துக்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதி பொலிஸ் மாஅதிபர் ஏ.எல்.யூ.என்.பீ.லியனகே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.












Discussion about this post